Saturday, January 21, 2012

கீழக்கரையில் சுகாதாரம் குறித்து கலந்தாய்வு கூட்டம்!

கீழக்கரையின் சுகாதார வசதிகள், மற்றும் அதனை மேம்படுத்துவதற்கான கலந்தாய்வு கூட்டம் நேற்று 20.01.2012 அன்று கீழக்கரை ஹுசைனியா மஹாலில் நடைபெற்றது.  சமூக பிரமுகர் கே.டி.எம். அமீர் ஏற்பாடு செய்திருந்த இந்த நிகழ்ச்சிக்கு, அனைத்து ஜமாஅத்துக்கள், பொது நல சங்கங்கள், நகராட்சி பிரதிநிதிகள், இயக்கங்கள், மற்றும் அனைத்து கட்சியை சார்ந்தவர்களும் கலந்து கொண்டனர்.

  சுகாதார நலம் பற்றிய விழிப்புணர்வு மற்றும் மேம்படுத்துவது குறித்து பல்வேறு கருத்துக்கள் விவாதிக்கப்பட்டது. 
இந்த கூட்டத்தில் நகராட்சித் தலைவர் ராபியத்துல் காதரியா கலந்து கொண்டு உறையாற்றிய போது: “கீழக்கரையில் அதிகமாக ப்ளாஸ்டிக் பைகளை பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும்,  வரும் ஃபிப்ரவரி முதல் இதற்கான தடை அமுலுக்கு வருகிறது, இந்த கூட்டம் முடிந்து வெளியே செல்லும் போது கூட வழியில் பழம் வாங்கி செல்ல  வாய்ப்பு இருக்கிறது, அப்போதும் இந்த கூட்டத்தில் கலந்து கொண்டவர்கள் ப்ளாஸ்டிக் பையை தவிர்த்து சணல் பைகளை பயன் படுத்த வேண்டும்” என்று கேட்டுக் கொண்டார்.

மேலும் கூறுகையில், “இந்த தடை தீர்மானம் நிறைவேற்றுயது முதல்  எங்கள் வீட்டு உபயோகத்திற்கு கூட நாங்கள் காகித தாளையும், துணிப் பையையுமே பயன்படுத்தி வருவதாக” தெரிவித்தார்.
மேலும் அவர், “எனது இந்த 5 வருட நகராட்சி தலைமை பதவி காலத்துக்குள் குப்பை இல்லாத நகராட்சியாக மாற்றிக் காட்டுவேன், அதற்கு உங்களின் ஒத்துழைப்பு மிக அவசியம்” என்றும் கூறினார். மேலும் சுகாதார கேடுகளை விளைவிப்பவகளுக்கு அபராதம் விதிக்க வேண்டும் என்று பேசிய சாதிக் அவர்களின் கருத்துக்கு ஆதரவளிப்பதாகவும் கூறீனார்.

இதில், சுலைமான் ஆலிம் ட்ரஸ்ட் நிர்வாகி அப்துல் காதர்,  பைத்துல்மால் செயலாளர் முகைதீன் தம்பி, ஸதக்கத்துன் ஜாரியா பள்ளியின் தாளாளர் எம்.ஏ.கே. ஜமாலுதீன், முன்னாள் நகர் மன்ற உறுப்பினர் மாலிக்,  சமூக சேவகர் ஸாதிக், துணைத் தலைவர் ஹாஜா முகைதீன்,  நகர் மன்ற உறுப்பினர்கள் சித்திக் அலி,  ரஃபியுதீன்,  முஹைதீன் காதர் ஸாஹிபு, முகைதீன் இப்ராஹீம், இடிமின்னல் ஹாஜா,  ஹாஜா நஜ்முதீன், அருஸியா பேகம் மற்றும் நகராட்சித் தலைவரின் கணவர் ரிஸ்வான் ஆகியோருடன் நகர் அ.தி.மு.க நிர்வாகிகள் பலரும்  கலந்து கொண்டனர்.

0 விமர்சனங்கள்:

Post a Comment

Blogroll


இத்தளத்திற்கு வருகை தரும் உங்கள் மீது ஓர் இறையின் சாந்தியும் சமாதானமும் உண்டாகட்டுமாக!!