Friday, December 21, 2012

பீட்ரூட் சாறு- உயர் ரத்த அழுத்தத்தை குறைக்கிறது!

தினசரி அடிப்படையில் உடனடியாக ரத்தக் கொதிப்பு ஏற்பட்டு ரத்த அழுத்தம் அதிகரிக்கிறதா பீட்ரூட் ஜூஸ் ஒரு கிளாஸ் அடியுங்கள் சரியாகிவிடும் என்கிறது ஆஸ்ட்ரேலிய ஆய்வு ஒன்று.

Thursday, December 20, 2012

கஃபதுல்லாஹ்வின் முன்னாள் இமாம் வஃபாத்தானார்!

இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்....

சவூதி அரேபியாவிலுள்ள புனிதமிக்க மக்கா ஆலயமான கஃபதுல்லாஹ்வின் முன்னாள் இமாம் அஷ்ஷைக் முஹம்மத் பின் அப்துல்லாஹ் அஸ்ஸபீல் நேற்று முன்தினம் 17.12.12 வஃபாத்தானார், நேற்று அசர்க்குப்பிறகு கஃபதுல்லாஹ்வில் ஜனாசா தொழுகை நடத்தப்பட்டு அல்-அத்ல் கபரஸ்தானில் அடக்கம் செய்ய்யப்பட்டார் அவருக்கு வயது 89.

Monday, December 17, 2012

இண்டர்நெட் வேகத்தை அதிக படுத்த சில வழிகள் !!!

எந்த விதமான வேகத்தடையும் இல்லாமல் அதிவேக இண்டர்நெட் பயன்படுத்த புதிய வழிமுறை.

Thursday, December 13, 2012

பேரிச்சம் பழத்தின் நன்மைகள்!

நிறைய பேர் டயட்டில் இருக்கும் போது பேரிச்சம் பழத்தையும் சேர்த்துக் கொள்வார்கள். ஏன் என்று தெரியுமா? ஏனெனில் அதில் நிறைய சத்துக்கள் நிறைந்துள்ளன. மேலும் மருத்துவர்களே தினமும் பேரிச்சம் பழத்தையும் உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும் என்று அறிவுறுத்துவார்கள். அதிலும் நீரிழிவால் பாதிக்கப்பட்டவர்கள் கூட தினமும் 1-2 பேரிச்சம் பழம் சாப்பிட்டால், நம்பமாட்டீர்கள் இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவு அதிகரிக்காமல் இருக்கும்.

Tuesday, December 11, 2012

அரபு லீக்100 மில்லியன் டொலர்களை பலஸ்தீனத்திற்கு வழங்க முன் வருகை!

ஃபலஸ்தீன நிர்வாகத்திற்கு பல நூறு மில்லியன் டொலர்களை நிதியுதவியாக வழங்க அரபு லீக் வெளியுறவு அமைச்சர்கள் இணங்கியுள்ளனர். ஃபலஸ்தீனு க்கான வரி வருமானத்தை இஸ்ரேல் முடக்கியதை அடுத்தே அரபு லீக் இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது.

Thursday, November 29, 2012

ஆங்கிலம் கற்றுக் கொள்ளலாம் வாங்க!

இன்றைய நவீன உலகில் ஆங்கிலம் (English) என்பது தவிர்க்க முடியாத மொழியாகிவிட்ட காரணத்தால் அதை கற்றுக் கொள்வது அவசியமாகிறது. நீங்கள் எளிமையாக ஆங்கிலம் எவ்வித பணச் செலவு இல்லாமல் இலவசமாக கற்றுக் கொள்ள கீழ் காணும் லிங்கை தொடர்பு கொள்ளுங்கள்.

http://www.youtube.com/user/MinooAngloLink?v=m9Cda9xyMr0&feature=pyv

Wednesday, November 28, 2012

நம் உள்ளுர் பழங்களை சாப்பிடுங்கள்

நம்ம நாட்டில் சுவையும், ருசியும், ஆரோக்கியம் உள்ள காஷ்மீர் ஆப்பிள்கள் இருக்க இதை வாங்கி சாப்பிட்டு நோயை நாமே விலைக்கு வாங்குவானேன்?







http://www.facebook.com/photo.php?v=550050815011161




தயவு செய்து மேற்கத்திய மோகங்களை குறையுங்கள்! நம் உள்ளுர் பழங்களை சாப்பிடுங்கள். அதில் அதிக சுவையும், நலன்களும் உண்டு.

-கீழை ஜமீல் முஹம்மது.

Saturday, November 24, 2012

இஞ்சியின் மருத்துவ குணங்கள்!


சுக்குக்கு மிஞ்சிய வைத்தியமும் இல்லை என்று சொல்வார்கள் ! இஞ்சி காய்ந்தால் சுக்கு ஆகும். இது பல மருத்துவப் பயன்களைக் கொண்டிருக்கிறது. இதன் பயன்களைப் பற்றி கீழே காண்போம்.

Tuesday, November 20, 2012

அமெரிக்க, இஸ்ரேலிய பொருட்களை புறக்கனிப்போம்! பாலஸ்தீன் மக்களின் போராட்டத்திற்கு துனை நிற்போம்!

என் அன்பிற்கினிய சொந்தகளே!

கடந்த 7 நாட்களாக பயங்கரவாத இஸ்ரேலின் கொடூரத்தை நாம் கண்டு வருகிறோம். பச்சிளம் குழந்தைகள், பெண்கள், முதியவர்கள் என அப்பாவி பொது மக்களை கொன்று வரும் இஸ்ரேலுக்கு நம்மாள் முடிந்த பாடத்தை கற்றுக் கொடுக்க வேண்டும்.

இஸ்ரேலின் தயாரிப்புகள் அரபு நாடுகளுக்குள் நேரடியாக களம் இறங்காது, அது அதன் கள்ளத் தாய் அமெரிக்கா மூலம் வருவதால், தயவு செய்து அமெரிக்க தயாரிப்புகளை புறக்கணியுங்கள்.

இஸ்ரேலின் அழிச்சாட்டியம் அத்தனைக்கும் முட்டுக் கொடுக்கும் அமெரிக்காவுக்கு பாடம் புகட்ட முடிந்தவரை அமெரிக்க பொருட்களை வாங்காதீர்கள்.

முதலில் அமெரிக்க உணவுகளை, பானங்களை (Food & Soft Drinks) போன்றவற்றை வாங்காதீர்கள்.


அல்லாஹ்வுக்காக தயவு செய்து செய்யுங்கள்........ப்ளீஸ்..........

அன்புடன் சகோதரன்

கீழை ஜமீல் முஹம்மது.
 

பயங்கரவாத இஸ்ரேலின் கொடூரம்!

கடந்த ஏழு தினங்களாக பயங்கரவாத இஸ்ரேல் பாலஸ்தீனம் காஸா மீது நடத்தி வரும் கொடும் தாக்குதலையும், அந்நாட்டு அரசு அதிகாரிகள் கொடுக்கும் மனிதாபிமானம் அற்ற பேட்டிகளை இங்கே சென்று காணுங்கள்.

Saturday, November 17, 2012

இஸ்ரேலை கண்டித்து தென் கொரியாவில் ஆர்ப்பாட்டம்!

பயங்கரவாத இஸ்ரேலின் கொலைக்கார தாக்குதலை உடனடியாக நிறுத்த கோரி தென் கொரியாவில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

பாலஸ்தீன மக்களுக்கு ஆதரவாக நியூஸிலாந்தில் கண்டன ஆர்ப்பாட்டம்!

கடந்த 2 நாட்களாக பயங்கரவாத இஸ்ரேலின் கொலை வெறி தாக்குதலுக்கு உள்ளக்கப்பட்ட காஸா மக்களை காப்பாற்ற உலகின் பல இடங்களிலும் இஸ்ரேல் மற்றும் அமெரிக்காவுக்கு எதிராக கண்டன ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்று வருகின்றன்.

இன்று நியூஸிலாந்தின் ஆக்லாந்து நகரத்திலுள்ள அமெரிக்க தூதரகத்திற்கு முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அதில் பாலஸ்தீன கொடியினை அமெரிக்க தூதரகத்தின் முன்பு ஏற்றினர். 




படம் பிடித்த வாலிபரை விடுவியுங்கள்!


விமானநிலையத்தில் தன்னைப் படம் பிடித்த வாலிபரை விடுவித்துவிடும்படி தமிழகக் காவல்துறையை மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் கேட்டுக்கொண்டுள்ளார்.

Wednesday, November 14, 2012

புற்று நோய் சிகிச்சையில் புதிய கண்டுபிடிப்பு: வைட்டமின் "ஏ" குணப்படுத்துகிறது!

புற்றுநோய் செல்களின் வளர்ச்சியைக் கட்டுப்படுத்துவதில் வைட்டமின் "ஏ" சிறந்த முறையில் செயலாற்றுவதாக இங்கிலாந்தில் உள்ள யார்க் பல்கலை ஆய்வாளர்கள் இதனை கண்டுபிடித்துள்ளனர்.

Friday, October 19, 2012

கே.ஈ.சி.டியின் மனிதாபிமான உதவிகள்!

பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம்.

கடந்த 13 வருடங்களாக நம் ஊரின் மேம்பாட்டிற்காக பாடுப்படும் கீழக்கரை கல்வி தர்ம அறக்கட்டளை மாதந்தோறும் பற்பல பணிகளை செய்து வருகிறது.

இந்த மாத உதவிகளின் சில விபரங்கள்.

நம் கே.ஈ.சி.டியின் மனிதாபிமான உதவிகள்!

மாதந்திர உதவி :

போதுமான வருமானம் இல்லாத 10 குடும்பத்திற்கு மாதிந்திர உதவிகள் வழங்கப்பட்டன.

மருத்துவ உதவி :

காச நோயால் அவதிப்பட்ட ஒரு சகோதரரின் மருத்துவத்திற்கு ரூ.10,000 வழங்கப்பட்டது.

பொருளாதார உதவி :

தொண்டியை சேர்ந்த சகோதரர் ஒருவர் வேலைக்காக வெளிநாட்டிற்கு செல்ல டிக்கெட்டுக்கு ரூபாய் 18,000 வழங்கப்பட்டது.


இவண்
கீழக்கரை கல்வி தர்ம அறக்கட்டளை.

Friday, October 12, 2012

 இன்று (12.10.2012) மக்ரிப் தொழுகைக்கு பிறகு துபை அல் மனார் மையத்தில் இஸ்லாமிய பயான் இறையருளால் மிகச் சிறப்பாக நடைபெற்றது.

சகோதரர் ஃபுஆத் கிராஅத்துடன் துவங்கிய இந்நிகழ்ச்சியினை சகோதரர் ஜஅஃபர் தொகுத்து வழங்கினார்.
 
 இலங்கையை சேர்ந்த இஸ்லாமிய அறிஞர் முபாரக் மதனி, சொர்க்கத்திற்கு செல்வதற்கான வழி எது என்ற தலைப்பில் மிக அருமையான உரை ஒன்றை ஆற்றினார்.

உரையில் அவர் எடுத்து வைத்த குர்ஆனிய வசனங்கள், ஹதீஸ்களின் விளக்கம் பார்வையாளர்களின் கண்களை கசிய வைத்தது.

இறுதியாக சகோதரர் கீழக்கரை நஜிமுத்தீன் நன்றியுரை கூற, நிகழ்ச்சி நிறைவுற்றது.

சகோதரர் ரஃபி அஹ்மது தலைமையிலான குழு நிகழ்ச்சிக்கான ஏற்பாட்டினை செய்து இருந்தது.

அதிகமான ஆண்களும், பெண்களும் கலந்து கொண்டு பயன் பெற்றனர்.

தகவல் : கீழை ஜமீல் முஹம்மது.

Tuesday, October 09, 2012

குர்பான்கள் வரவேற்கப்படுகின்றன........

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)

அன்பான கீழக்கரை வாழ் சகோதரர்களே!

கடந்த 12 வருடமாக நம் ஊரிலுள்ள ஏழை மக்களுக்கும் நம் ஊரை சுற்றி உள்ள ஊர் மக்களுக்கும் ஹஜ் பெருநாள் அன்று மகிழ்வுடன் பெருநாள் கொண்டாட கூட்டு குர்பானியை நம் கீழக்கரை கல்வி தர்ம அறக்கட்டளை (KECT) வழங்கி வருகிறது.

அவ்வாறே, இந்த வருடமும் நம் அறக்கட்டளை சார்பாக குர்பான் கறி வழங்க இருப்பதால் உங்களது குர்பானை கீழக்கரை கல்வி தர்ம அறக்கட்டளை தந்து வழங்குமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறோம்.

ஆடு ஒன்றுக்கு – ரூ.6,000/-

மாடு ஒரு பங்குக்கு – ரூ.1,500/-

தொடர்புக்கு......

கீழக்கரை : 04567-245832

சென்னை : 9080424243 / 9840120106

துபை : 050-4985037

இவண்

கீழக்கரை கல்வி தர்ம அறக்கட்டளை
கீழக்கரை.

உங்கள் உடல் ஆரோக்கியத்துடன் இருக்க.....

உங்கள் உடல் ஆரோக்கியத்துடன் இருக்க என்ன செய்ய வேண்டும்?

இன்றைக்கு சம்பாதிக்கும் காசு பணங்கள் மருத்துவத்திற்கே போதவில்லை. தலைவலி என மருத்துவமனைக்கு சென்றால், இரத்தப் பரிசோதனை (Blood Test) ஸ்கேன் என குறைந்த பட்சம் 1000 ரூபாய் செலவாகாமல் உங்கள் தலைவலி போகாது. தலைவலிக்கே 1000 என்றால், நீரிழிவு, காச நோய், இரத்த அழுத்தம், புற்று நோய் என வந்தால்....??!!

தலை சுத்துகிறது.........அந்த அளவிற்கு இன்றை நவீன மருத்துவம் நம்மை அடிமைப்படுத்தி விட்டது.

ஒரே செல்லால் உருவான உடம்பை பல கூறுகளாக பிரித்து, அதற்கு தனி தனி நோய்களால் பிரித்து அதற்கு சிகிச்சை என்ற பெயரில் நம்மை  நவீன மருத்துவத்தில் அடிமைப்படுத்தி உள்ளனர். ஆகவே. இன்று எதற்கு எடுத்தாலும், மருந்து, மாத்திரை என்ற உலகமாகி விட்டது. மருத்துவராக படித்து விட்டு வெளி வரும் ஒருவர் கோடான கோடியினை சம்பாதிக்கலாம். மருத்துவர் ஒருவர் தன் சொந்த ஊரில் கேவலம் மாதம் 50,000 ரூபாய் தராளமாக சம்பாதித்து விட முடியும். அந்த அளவிற்கு நோய் பயத்தை மக்களுக்கு ஊட்டப்பட்டுள்ளது.

வெளிநாட்டில் வேலையில் பார்க்கும் சகோதரர்களுக்கு இனிப்போ, பலகாரமோ அவர்கள் குடும்பத்தினர் அனுப்புவதில்லை. நீரழிவு மாத்திரை, பிரஸ்ஸர் மாத்திரை, சுகர் ஃப்ரீ டேப்லட் என்றுதான் அனுப்பி வைக்கின்றனர்.

இன்று கடனே இல்லாத 1000 சதவீதம் இலாபம் தரும் ஒரே தொழில் மருத்துவமனைகள்தான் என்றால் அது மிகையல்ல.

இன்று ஏதாவது நோய் வந்து விட்டால், நாம் மிகவும் கவலைப்படுகின்றோம். நோயினை கண்டு கவலையோ, அச்சமோ கொள்ள வேண்டாம். தையரியத்துடன் இருப்போமானல், நோயின் வீரியம் பாதிக்கு மேல் குறைந்து விடும். மீதியினை கீழ்காணும் முறையில் பின்பற்றினால் இறையருளால் முற்றிலும் சுகமாகும்.

நம்மை படைத்த ஏக இறைவன் (வல்ல ரஹ்மான்), நமக்கு வந்த நோயினையும் போக்க ஆற்றலுடையவன். கண்ணியமிக்க நபி (ஸல்) அவர்களுக்கு நோய் ஏற்படும் பொழுது அவர்கள் "குல் அவூது பிரப்பின்னாஸ், குல் அவூது பிரப்பில் ஃபலக்" இந்த இரண்டு சூராக்களையும் ஓதுவார்கள்.  ஓத முடிந்தால் ஓதிவிடுவார்கள் ஓத முடியாத அளவுக்கு நோய் இருக்கும் பொழுது நான் ஓதுவேன் என்று ஆயிஷா(ரலி) அவர்கள் சொல்கிறார்கள். நான் ஓதி அவர்கள் கையில் ஊதி அவர்களுடைய கையை கொண்டே உடம்பில் தடவி விடுவேன் என்று ஆயிஷா(ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். (நூல்: முஸ்லிம்)

மேலும் அல்ஹம்து சூராவின் மூலம் ஸஹாபி அபூ ஸைது அல் குத்ரி (ரழி) அவர்கள் தேள் கடியின் விஷத்தினை இறங்கியதை ஆதாரப்பூர்வமான ஹதீஸின் வாயிலாக பார்க்கின்றோம்.

இதில் நாம் என்ன விளங்குகிறோம் என்றால் அல்ஹம்து சூரா, குல் அவூது பிரப்பின்னாஸ், குல் அவூது பிரப்பில் ஃபலக் இந்த மாதிரியான சில சூராக்களை நோய் வரும்பொழுது ஓதினோம் என்றால் அல்லாஹ் நிவாரணம் தருவான்.

அத்துடன் விட்டு விடாமல் கீழ்காணும் முறைகளை பயன்படுத்தினால் நல்ல பலனை இறைவன் வழங்குவான்.

Thursday, September 13, 2012

ஸஹீஹான ஹதீஸ்களை மறுக்கலாமா?

தலைப்பிற்கான வீடியோ கிளிப்பை காண இங்கே செல்லவும். 1/10

தலைப்பிற்கான வீடியோ கிளிப்பை காண இங்கே செல்லவும். 2/10

தலைப்பிற்கான வீடியோ கிளிப்பை காண இங்கே செல்லவும். 3/10

தலைப்பிற்கான வீடியோ கிளிப்பை காண இங்கே செல்லவும். 4/10

தலைப்பிற்கான வீடியோ கிளிப்பை காண இங்கே செல்லவும். 5/10

தலைப்பிற்கான வீடியோ கிளிப்பை காண இங்கே செல்லவும். 6/10

தலைப்பிற்கான வீடியோ கிளிப்பை காண இங்கே செல்லவும். 7/10

தலைப்பிற்கான வீடியோ கிளிப்பை காண இங்கே செல்லவும். 8/10

தலைப்பிற்கான வீடியோ கிளிப்பை காண இங்கே செல்லவும். 9/10

தலைப்பிற்கான வீடியோ கிளிப்பை காண இங்கே செல்லவும். 10/10 

இறுதித் தூதர் முஹம்மது (ஸல்) அவர்களை கேலி செய்த சினிமாவை தடைசெய்ய கோரி சென்னையில் நாளை (14.09.12) ஆர்ப்பாட்டம்!

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)
அன்புக்குரிய சமுதாய சொந்தகளே!

நம் உயிரினும் மேலான கண்ணியமிக்க நபி முஹம்மது (ஸல்) அவர்களை இழிவுப்படுத்தி வெளியிட்ட திரைப்படத்தை தடைசெய்ய கோரியும், தொடர்ந்து முஸ்லிம்களை சீண்டும் அமெரிக்கர்களை கண்டித்தும் நாளை (14.09.2012) வெள்ளிக் கிழமை மாலை 4 மணிக்கு இன்ஷா அல்லாஹ் மாபெரும் ஆர்ப்பாட்டம் நடைபெற இந்திய தவ்ஹீத் ஜமாஅத் சார்பில் நடைபெற இருக்கிறது.

Tuesday, July 03, 2012

கீழக்கரை பெண் நோயாளி ஒருவருக்கு உடனடியாக இரத்தம் தேவை!

கீழக்கரை வடக்குத் தெருவைச் சேர்ந்த, 43 வயதுள்ள ஆபிதா பேகம் என்ற பெண்மணி, சிறுநீரக கோளாரால் (கிட்னி பெயிலியர்) பாத்திக்கப்பட்டுள்ளார். இவர் தற்போது இராமநாதபுரம் கனகமணி மருத்துவமனையில் டயாலிசிஸ் சிகிச்சை பெற்று வருகிறார். இவருக்கு தொடர்ந்து A'  POSITIVE இரத்த வகை தேவைப்படுகிறது.

வஃபாத்து அறிவிப்பு

கீழக்கரை கிழக்குத் தெருவைச் சேர்ந்த மர்ஹும் முஹம்மது முஹைதீன் (திமுக ஹக் காக்கா) அவர்களின் ஓரே மகன், முஹம்மது அலி ஜின்னா அவர்கள் (49 வயது) துபையில் கடந்த 26-06-2012 செவ்வாய் கிழமை அதிகாலை வஃபாத்தானார். இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன். (இறைவனிடமிருந்து வந்தோம். அவனிடமே மீளப் பெறுவோம்.)

அன்னாரின் ஜனாஸா 02.07.12 அன்று அஸர் தொழுகைக்கு பின் துபை கிஸஸ் மையவாடியில் நல்லடக்கம் செய்யப்பட்டது. அன்னாரின் மறுமை வாழ்விற்காக துஆ செய்யவும்.

Saturday, February 04, 2012

கீழக்கரை நகராட்சிக்கு தனி ஆணையர் நியமிக்க சட்டமன்றத்தில் ஜவாஹிருல்லாஹ் M.L.A. கோரிக்கை!

ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் தொடர்பான விவாதத்தில் மனிதநேய மக்கள் கட்சியின் சட்டமன்ற குழு தலைவரும், இராமநாதபுரம் சட்டமன்ற உறுப்பினருமான முனைவர் M.H. ஜவாஹிருல்லாஹ் அவர்கள் நேற்று (03.02.12) அன்று ஆற்றிய உரையின்பொழுது தனது தொகுதிக்கு உட்பட்ட 3 நகராட்சிக்கும் தனி தனி நகராட்சி ஆணையர்களை நியமிக்க கேட்டுக் கொண்டார்.
தொகுதிப்பிரச்சனைகள்:
1.எனது இராமநாதபுரம் தொகுதியில் 3 நகராட்சிகள் உள்ளன. ஆனால் 3 நகராட்சிகளுக்கு தனி ஆணையாளர்கள் இருப்பதில்லை, தற்போது இராமநாதபுரம் நகராட்சி ஆணையாளர் கூடுதலாக கீழக்கரை நகராட்சியை கவனித்து வருகிறார். இராமேஸ்வரம் நகராட்சியில் நகராட்சிப் பொறியாளர் கூடுதலாக ஆணையாளர் பொறுப்பை கவனிக்கிறார் எனவே 3 நகராட்சிகளுக்கு தனி ஆணையாளர்கள் நியமனம் செய்யவேண்டுமென கேட்டுக்கொள்கிறேன்.

Saturday, January 28, 2012

திருட்டு வழக்கில் ஒருவர் கைது

கீழக்கரை மேலத்தெரு பகுதியில் இம்மாதம் 3-ம் தேதி நடைபெற்ற திருட்டு வழக்கில் ஒருவர் கைது செய்யப்பட்டார்.  

Sunday, January 22, 2012

கீழக்கரை நகராட்சி உறுப்பினர்களின் தொடர்பு எண்கள்

கீழக்கரை நகராட்சி - நடப்பு மன்ற உறுப்பினர்கள்



Saturday, January 21, 2012

கீழக்கரையில் சுகாதாரம் குறித்து கலந்தாய்வு கூட்டம்!

கீழக்கரையின் சுகாதார வசதிகள், மற்றும் அதனை மேம்படுத்துவதற்கான கலந்தாய்வு கூட்டம் நேற்று 20.01.2012 அன்று கீழக்கரை ஹுசைனியா மஹாலில் நடைபெற்றது.  சமூக பிரமுகர் கே.டி.எம். அமீர் ஏற்பாடு செய்திருந்த இந்த நிகழ்ச்சிக்கு, அனைத்து ஜமாஅத்துக்கள், பொது நல சங்கங்கள், நகராட்சி பிரதிநிதிகள், இயக்கங்கள், மற்றும் அனைத்து கட்சியை சார்ந்தவர்களும் கலந்து கொண்டனர்.

 

Friday, January 20, 2012

"வேலை தேடும் இளைய சமுதாயமே வருக" - மாவட்ட கலெக்டர் வேண்டுகோள் !

இராமநாதபுரத்தில் இரயில்களின் சேவையை அதிகப்படுத்த வேண்டும்! -ஜவாஹிருல்லாஹ் கோரிக்கை!

இராமாநாதபுரத்திற்கு வருகைப் புரிந்த தென்னக ரயில்வே பொது மேலாளரிடம் இன்று (19-01-2012) 10 கோரிக்கை மனுக்களை அளிக்கப்பட்டது. அந்த கோரிக்கை மனுக்களில் இடம் பெற்றுள்ளவை-

1. 16701 சேது விரைவு வண்டி இராமநாதபுரத்திற்கு அதிகாலை 2.55 மணிக்கு வருகின்றது. இது அசாதாரணமான நேரமாகும். இதனால் அருகில் உள்ள ஊர்களுக்குச் செல்ல வேண்டிய பயணிகள் காலை 6 மணி வரை பேருந்திற்காக காத்திருக்க வேண்டிய சூழல் உள்ளது.மேலும் இந்த வருகை நேரம் முதியோர்கள், பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு பல்வேறு தொல்லைகளை அளிக்கின்றது.

அபூதாபியில் காயல் நல மன்றம் துவங்கியது!

உலகமெங்கும் வாழும் காயல் சகோதரர்கள் தங்கள் ஊர் நலன் வேண்டி, தாங்கள் வாழும் பகுதியில் காயல் நல மன்றம் என்ற பெயரில் அமைப்பினை தொடங்கி செயல்பட்டு வருகின்றனர்.

Wednesday, January 18, 2012

கீழக்கரையில் சாலைகளை மீண்டும் போட நகராட்சி ஆணையர் உத்தரவு!

கீழக்கரையில் அவசர கோலத்தில் போடப்பட்ட குண்டும் குழியுமான சாலைகளை மீண்டும் போடுமாறு நகராட்சி கமிஷனர் முஜிபு ரஹ்மான் உத்தரவிட்டுள்ளார்.

Tuesday, January 17, 2012

இணைய இணைப்பு எப்படி இயங்குகிறது?

எங்கோ ஒரு மூலையில் இயங்கும் கம்ப்யூட்டரில் உள்ள தகவலை, பாட்டை, சினிமாவை, விளையாட்டை எப்படி இன்டர்நெட் நம் கம்ப்யூட்டருக்குக் கொண்டு வருகிறது? என்ற கேள்வி இன்டர்நெட்டைப் பயன்படுத்தும் அனைவருக்கும் இருக்கும். தெளிவான மற்றும் நிறைவான பதில் கிடைக்காததால் கேள்வியாகவே தொடரும் நிலையும் உள்ளது. இங்கு எப்படி உங்கள் கம்ப்யூட்டரை இன்டர்நெட் மூலம் தகவல் கள் வந்தடைகின்றன என்று பார்க்கலாம்.




COMPUTER என்ற வார்த்தைக்கு அர்த்தம் தெரியுமா?

நாம் எத்தனையோ ஆண்டுகளாக COMPUTER பயன்படுத்தி வருகிறோம்.  ஆனால் இன்னும் சிலருக்கு கம்ப்யூட்டர் 'ன் முழு பெயர் தெரியவில்லை.  அவர்களுக்காக இதை எழுதுகிறேன்.

Tuesday, January 03, 2012

கீழக்கரையில் இதஜ சார்பாக சமூக எதிர்ப்பு தெரு முனைப்பிரச்சாரம்!

கீழக்கரையில் கிழக்குத்தெரு, மேலத் தெரு, தெற்குத் தெரு,  சின்னக் கடை தெரு மற்றும் முஸ்லிம் பஜார் ஆகிய இடங்களில் சமூக தீமைக்கான எதிர்ப்பு தெருமுனைப் பிரச்சாரம் கடந்த 29.12.2011 அன்று மாவட்டத் தலைவர் முஸம்மில்ஹார் தலைமையில் நடைபெற்றது.



Blogroll


இத்தளத்திற்கு வருகை தரும் உங்கள் மீது ஓர் இறையின் சாந்தியும் சமாதானமும் உண்டாகட்டுமாக!!