Friday, February 08, 2013

பெண்களை பிறப்பிலேயே அடிமைப்படுத்துவது எந்த மதம்?

ஆணாதிக்கம்! ஆணாதிக்கம்! என இன்றைய நவீன பெண்கள் பேசுகிறார்கள். பெண்ணியம் காக்கப்பட வேண்டும் என கூக்குரல் இடும் பெண்களும், தனது திருமணநாளில் மணமகன் தன் கையால் கட்டும் தாலியை மூன்று முடிச்சுப் போட்டு வாங்கி கொள்ளும் பெண் அடிமைத்தனத்திற்கு ஆளாகிறார்கள்.
திருமணம் என்பது ஒப்பந்தம் என இஸ்லாம் சொல்கிறது. ஆண்தான் திருமணம் செய்யும் பெண்ணுக்கு அவள் கேட்கும் வரதட்சணை கொடுத்து மணம் முடிக்க வேண்டும் என கட்டாயப்படுத்துகிறது.

நீங்கள் (மணம் செய்து கொண்ட) பெண்களுக்கு அவர்களுடைய மஹர் (திருமணக்கொடை)களை மகிழ்வோடு (கொடையாக) கொடுத்துவிடுங்கள் - அதிலிருந்து ஏதேனும் ஒன்றை மனமொப்பி அவர்கள் உங்களுக்கு கொடுத்தால் அதைத் தாராளமாக, மகிழ்வுடன் புசியுங்கள். (அல் குர்ஆன் - 4:4)

இப்படி பெண்களுக்கு மேன்மை செய்யும் இஸ்லாத்தை கொச்சைப்படுத்துவோர், இந்து மதம் ஒரு பெண்ணை பிறக்கும் பொழுதே அடிமைத்தனத்திற்குள் நுழைய செய்கிறது.



நான் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் சொல்வதெல்லாம் உண்மை என்ற நிகழ்ச்சி பார்ப்பது உண்டு. கடந்த ஜனவரி மாதம் பார்த்த இரண்டு நிகழ்ச்சிகளின் விபரங்களை நான் கீழே தந்துள்ளேன். காய்த்தல் உவத்தல் இன்றி சீர் தூக்கி பாருங்கள்.

25.01.2013 அன்று காட்டப்பட்ட நிகழ்ச்சியில்  6 வருடம் காதலித்து, முறையாக திருமணம் செய்து 6 மாதமாக வாழும் இந்த காதல் தம்பதியினை இரு வீட்டாரும் பிரிக்க கடும் முயற்சி எடுப்பதாக குற்றச்சாட்டு!

நாம் இந்த நிகழ்ச்சியில் நடைபெற்ற முழுப் பிரச்னைக்கும் போகவில்லை. ஆனால் அதில் உள்ள முக்கிய பிரச்னை என்ன வென்றால்? காதலித்து கரம் பிடித்த இந்த பையன் இந்த பெண்ணுக்கு சித்தப்பா முறையாம். அதாவது பெண்ணின் தந்தைக்கு சித்தப்பா மகன் தம்பியாம். இது இந்து மத தர்மப்படி முறையற்ற உறவாம். காசு பணமோ, ஜாதி பிரச்னையோ இல்லை. இதுதான் பிரச்னை.

இந்த நிகழ்ச்சி நடத்தும் பெண்ணும் அந்த காதல் தம்பதியிடம் சொல்கிறார், “இது சமூகத்திற்கு அவமான விஷயம்மா... எனவே பிரிந்து விடுங்கள்” என மிகவும் வேண்டி கேட்கிறார். ஆனாலும் பிடிவாதமாக அந்த காதல் ஜோடி நாங்கள் கடந்த 6 மாதமாக முறையாக திருமணம் செய்து கணவன் மனைவியாக வாழ்ந்து விட்டோம். இனி ஒருபோதும் பிரியமாட்டோம் என உறுதியாக இருந்ததால் அவர்கள் கணவன் வீட்டிற்கு செல்லாமல் தனியாக போய் விட்டனர்.

இது ஒரு கதை. கொஞ்சம் நேரம் அதை வைத்து விட்டு அடுத்த கதைக்கு வருவோம்.

28.01.2013 அன்று மற்றொரு சம்பவத்தை  காட்டினார்கள். அதில் சொந்த தாய் மாமாவை திருமணம் செய்த பெண் படும் கொடுமையை காட்டினார்கள்.

இதில் தாய் மாமா, தன் சகோதரி மகளை விட 20 வருடம் மூத்தவர். பெண்ணின் தாயாரை விட1 வயது இளையவராம். (ஒரு இஸ்லாமிய பெண்ணுக்கு இப்படி 20 வயது மூத்த மாப்பிள்ளையை முடித்து இருந்தால், இது அநியாம் இல்லையா? பாலியல் திருமணம் முடித்து விட்டார்கள் என கூக்குரலிடுவர்கள் என்பது தனி விஷயம்)

இது இந்து மத தர்மப்படி முறையான திருமணமாம். ஒரு பெண்ணை எந்த அளவிற்கு இந்து மதம் அடிமைப்படுத்துகிறது என்பதை பாருங்கள்.

சித்தப்பா முறையில் உள்ள பையனை மணம் முடிப்பது முறையற்ற திருமணமாம். சொந்த மாமாவை திருமணம் செய்வது முறையான திருமணமாம்.

ஒரு பையனோ, பெண்ணோ தன் உடன் பிறந்த சகோதரியையோ, அல்லது சகோதரனையோ மணக்க மாட்டார். ஏனெனில் அவர்கள் தன் தாய் தந்தைக்கு பிறந்தவர்கள் என்ற ஓரே காரணத்திற்காக.....

ஆனால் இந்து மதத்தின்படி ஒரு  பையனோ, பெண்ணோ தன் உடன் பிறந்த சகோதரியையோ, அல்லது சகோதரனையோ மணக்கக் கூடாது என்பதற்கு அவர்கள் ஒரே தாய், தகப்பனுக்கு பிறந்தவர்கள் என்பதை விட இவர்கள் எல்லோரும் ஒரு தகப்பனுக்கு பிறந்தவர்கள் என்பதாலேயே அவர்கள் மணம் முடிக்க மறுக்கிறார்கள் என கீழ்காணும் விஷயங்கள் உண்மைப்படுத்துக்கின்றன.

ஒரு குழந்தையை உருவாக்கும் பொறுப்பு, ஆணுக்கு மட்டுமே உண்டு. பெண்ணுக்கு இல்லை என ஆணத்திக்கம் பேசுகிறது இந்து மதம்.
அதற்கு சாட்சியாக மேலே நான் சுட்டிக்காட்டியுள்ள இரண்டு சம்பவங்களை நீங்கள் பார்க்கலாம்.

தன் தந்தைக்கோ, தன் தாய்கோ பிறக்காத தன் தன் சித்தப்பா வீட்டு தம்பியை மணம் முடிப்பது தடை செய்யப்பட்டதாம். ஆனால் தன் தாயின் வயிற்றில் பிறந்து, தனக்கு முன்பாக தன் தாயின் மடியில் பால் குடித்த உடன் பிறந்த சகோதரி மகளை மணம் முடிப்பது ஆகுமாக்கப்பட்ட உறவாம்.

ஒரு பையன், தன் சகோதரர்களின் மகள்களை மணம் முடிக்கக் கூடாது. ஏனெனில் அந்த சகோதரின் இரத்தமும், அவனது இரத்தமும் ஒரே இரத்தம். அந்த சகோதரனுக்கு பிறந்த மகள், தனக்கு பிறந்த மகளுக்கு சமம் என்பதால் அவளை திருணம் முடிக்க கூடாது என இந்து மதம் சொல்கிறது.

ஆனால், ஒரு பையன், தன் சகோதரிகளின் மகளை மணம் முடிக்கலாம். ஏனெனில் தன் சகோதரிகள் பெறும் குழந்தைகள் அவர்களுடைய இரத்தம் அல்ல, அவர்கள் கணவன்மார்களின் இரத்தம் மூலம் உருவாக்கப்படுவதால், அந்த பெண்ணை மணம் முடிப்பதில் தவறு இல்லை. அது முறையான உறவு என்று இந்து மதம் சொல்வது மூலம் ஒரு குழந்தை உருவாக காரணம் ஆண் மட்டுமே என சொல்கிறது. அதாவது, ஒரு குழந்தை ஆண், பெண் இருவரின் இரத்தத்தில் உருவாகிறது என்பதை மறுத்து ஆணுக்கு மட்டுமே அந்த உரிமை. பெண் என்பவள், பிள்ளை பெறும் இயந்திரம் மட்டுமே என சொல்வதை இதன் மூலம் அறியலாம்.

ஆனால், இன்றைய விஞ்ஞானம் ஆணின் விந்துவில் மட்டும் குழந்தை உருவாகவில்லை. பெண்ணின் கருமுட்டையோடு இணைந்துதான் குழந்தை உருவாக்க்ப்படுகிறது என ஆதாரப்பூர்வமாக நிரூபிக்கிறது. ஆகவேதான் ஒரு குழந்தை தந்தையின் சாயலிலும், தாயின் சாயலிலும் பிறக்கிறது. தந்தையின் பண்புகளையும், தாயின் பண்புகளையும் மற்றும் இருவரின் மரபுகளையும் கொண்டு வருகிறது.

ஆனால், இஸ்லாம் மிக அருமையாக பெண்ணுக்கு கவுரவித்தை வழங்குகிறது. இஸ்லாம் கூறும் கருவியல் குறித்து கனடா நாட்டில் உள்ள டொரண்டா பல்கலைக்கழகத்தில் மனித உடற்கூறு இயல் துறையின் தலைவராக (Head and Chair Person of the Department of Anatomy) இருக்கும் பேராசிரியர் டாக்டர் கீத் மூர் (Dr. Keith Moore) அவர்கள், கருவியல் (Empryology) துறையில் தேர்ச்சி பெற்ற வல்லுனர் ஆவார். இவர் எழுதிய ‘Developing Human’ என்ற கருவியல் பற்றிய நூல் உலகம் முழுவதிலும் உள்ள மருத்துவ கல்லூரிகளில் பாடபுத்தகமாக (Reference Book) இருக்கிறது.

‘மனிதக்கரு வளர்ச்சியானது (Development of Embryo) பல்வேறு வளர் நிலைகளைக் (Stages) கொண்டது என்ற அறிவியல் உண்மையை கி.பி. 1940 வரை கண்டுபிடிக்கப்படவில்லை. உலகம் முழுவதும் நாம் பெற்றிருக்கும் கருவளர்ச்சி பற்றிய தற்கால அறிவை சில ஆண்டுகளுக்கு முன்னரே பெற முடிந்தது. ஆனால், குர்ஆன் “தாயின் கர்ப்பப்பையில் மனிதக்கரு பல்வேறு நிலைகளில் வளர்கின்றது” என்பதை கி.பி. 7-ஆம் நூற்றாண்டிலேயே கூறியது என்னை மிகப்பெரிய வியப்பில் ஆழ்த்தியது என்றார்.
“உங்களுக்கு என்ன நேர்ந்தது? அல்லாஹ்வின் மகத்துவத்தை(யும் மேன்மையையும்) நீங்கள் உணராமலிருக்கின்றீர்கள். ‘நிச்சயமாக அவன் உங்களை பல நிலைகளிலிருந்து படைத்தான்” (அல்குர்ஆன்: 71:13-14)மேலும் டாக்டர் மூர் கூறுகையில், கருவில் வளரும் குழந்தையின் குணாதிசயங்கள் (Genetic Plan) கருத்தரித்த முட்டையில் (Zygote)-ல் உள்ள குரோமோஸோம்களில் இருப்பதைப்பற்றி 19-ஆம் நூற்றாண்டின் இறுதிவரை கண்டுபிடிக்கப்படவில்லை. ஆனால், குர்ஆன், கருவில் வளரும் குழந்தையின் எதிர்கால குணாதிசயங்களும், அமைப்பும் ‘நுத்ஃபா’வில் இருக்கின்றது.

ஒரு பெண் தன் தாய், தகப்பன் இருவரின் இரத்தத்திலும் உருவாக்கப்படுகிறாள் என்பதை உறுதிப்பட சொல்லும் இஸ்லாம், அவள் தன் வாழ்க்கையின் துணையை தேர்வு செய்யும் முறையை சமமாகவே அளிக்கிறது.

ஒரு பெண் தன் தந்தையுடன் பிறந்த சகோதரர்களை (பெரியப்பா, சித்தப்பா) மணம் முடிக்க கூடாது. அது முறையற்ற தடுக்கப்பட்ட உறவாகும். அவ்வாறே தாயுடன் பிறந்த சகோதரர்களை (மாமார்களை) மணம் முடிப்பதும் தடை செய்யப்பட்ட உறவு என ஆணதிக்கத்திற்கு முற்றுப் புள்ளி வைத்து பெண்ணியம் பேணுகிறது.

ஒரு பெண், தன் தாயுடன் பிறந்த சகோதரர்களின் பிள்ளைகளை மணந்து கொள்ள எவ்வாறு அனுமதி அளிக்கிறதோ, அவ்வாறே தன் தாயுடன் பிறந்த சகோதரிகளின் பிள்ளைகளையும் மணந்து கொள்ள அனுமதியளித்து ஆணுக்கு பெண் வேறுபாடுகளை களைகிறது. ஒரு பெண்ணின் மீது ஆணுக்கு இருக்கும் அதே உரிமை பெண்ணும் நீதியோடு இஸ்லாம் நிலை நாட்டுகிறது.

ஒரு பெண், தன் தந்தையின் சகோதரிமார்களின் பிள்ளைகளை திருமணம் செய்வதை அனுமதிக்கும் இஸ்லாம், தன் தந்தையுடன் பிறந்த சகோதரர்களின் பிள்ளைகளையும் திருமணம் செய்யலாம் என அனுமதியளிக்கிறது.

இஸ்லாம் ஆணுக்கும் பெண்ணும் திருமண முடிக்க தடை செய்யப்பட்ட உறவாக கூறுவது.

தந்தையோடு பிறந்தவர்களை, தாயோடு பிறந்தவர்களை, தந்தைக்கு பிறந்தவர்களை, தாய்க்கு பிறந்தவர்களை, தாயின் மடியில் பால் அருந்தியவர்களை மணக்க தடை செய்துள்ளது.

ஆகவே இஸ்லாம் குறித்தும், பெண்ணியம் குறித்து நடுநிலையோடு சிந்திக்கட்டுமாக! அவர்களுக்கு ஏக இறைவன் நேரிய சிந்தனையை வழங்கட்டுமாக!

-கீழை ஜமீல் முஹம்மது.

0 விமர்சனங்கள்:

Post a Comment

Blogroll


இத்தளத்திற்கு வருகை தரும் உங்கள் மீது ஓர் இறையின் சாந்தியும் சமாதானமும் உண்டாகட்டுமாக!!