Wednesday, December 14, 2011

நகராட்சித் தலைவர் இலவச சைக்கிள் வழங்கினார்!

கீழக்கரை கிழக்குத்தெரு ஹைராத்துல் ஜலாலியா மேல் நிலைப்பள்ளி மாணவர்களுக்கு இலவச சைக்கிள் வழங்கும் நிகழ்ச்சி இன்று (13.12.2011)  காலை பள்ளியின் தாளாளர் டாக்டர் சாதிக் அவர்கள் தலைமையில் அப்பள்ளி வளாகத்தில் நடைபெற்றது.



இந்த நிகழ்ச்சியில்  நகராட்சித் தலைவர் ராபியத்துல் காதரிய்யா சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு 168 மாணவர்களுக்கு தமிழக அரசால் வழங்கப்பட்ட இலவச மிதி வண்டிகளை வழங்கினார்.


நிகழ்ச்சியில் முன்னாள் தாளாளர் மஹ்மூது கரீம், தொடக்க பள்ளி தாளாளர் M.M.S.ஸெய்யது இபுராஹீம், கிழக்குத்தெரு ஜமாத் உதவி தலைவர் முஹைதீன்,  நகராட்சித் துணைத் தலைவர் ஹாஜா முஹைதீன், 7வது வட்ட உறுப்பினர் அன்வர் அலி, சமுதாய பிரமுகர் நெய்னா முகம்மது, மவ்லாதம்பி, அஜ்ஹர் உள்ளிட்ட கிழக்குத் தெரு ஜமாஅத் பிரமுகர்கள் மற்றும் பொது மக்கள் கலந்து கொண்டனர்.

-இப்னு லத்தீஃபா.


0 விமர்சனங்கள்:

Post a Comment

Blogroll


இத்தளத்திற்கு வருகை தரும் உங்கள் மீது ஓர் இறையின் சாந்தியும் சமாதானமும் உண்டாகட்டுமாக!!