கீழக்கரையில் அவசர
கோலத்தில் போடப்பட்ட குண்டும் குழியுமான சாலைகளை மீண்டும் போடுமாறு நகராட்சி கமிஷனர் முஜிபு ரஹ்மான்
உத்தரவிட்டுள்ளார்.
கீழக்கரை நகர்
முழுவதும் பல்வேறு பகுதிகளில் சாலைகள் குண்டும் குழியுமாக இருந்ததால் கடந்த
ஆட்சி காலத்தில் சாலைகள் அமைக்க நிதி ஒதுக்கப்பட்டது. இதையடுத்து சாலைகள்
அமைக்கும் பணி கடந்த சில நாட்களுக்கு முன் நடைபெற்றது.அவசர அவசரமாக அமைக்கப்பட்ட சாலைகள் தரமற்று இருப்பதாக ஜனவரி 4ம் தேதி தினகரன் நாளிதழில் செய்தி வெளியானது.
இதைத் தொடர்ந்து நகராட்சி கமிஷனர் முஜிபு ரஹ்மான், சாலைகளை ஆய்வு செய்தார். அப்போது சாலைகள் தரமற்ற நிலையில் உள்ளது தெரிந்தது.
இதையடுத்து சாலைகளை மீண்டும் போடுமாறு ஒப்பந்ததார்களுக்கு உத்தரவிட்டார்.
0 விமர்சனங்கள்:
Post a Comment