உலகமெங்கும் வாழும் காயல் சகோதரர்கள் தங்கள் ஊர் நலன் வேண்டி, தாங்கள் வாழும் பகுதியில் காயல் நல மன்றம் என்ற பெயரில் அமைப்பினை தொடங்கி செயல்பட்டு வருகின்றனர்.
அவ்வாறு, ஐக்கிய அரபு அமீரகத்தின் வணிக மண்டலமான துபையில் காயல் நல மன்றம் என்ற பெயரில் ஜே.எஸ்.ஏ.புகாரி தலைமையில் இயங்கி வருகின்றனர். இம்மாதம் 13ஆம் அமீரகத்தின் தலைமை மண்டலமான அபூதாபியில் காயல் நல மன்றம் என்ற பெயரில் அங்கு வாழும் காயல் சகோதரர்களால் துவக்கப்பட்டது.
கூட்டத்தின் துவக்க நிகழ்ச்சிகள் மன்றத் தலைவர் மவ்லவீ ஹபீபுர் ரஹ்மான் தலைமை தாங்கினார். அமீரக காயல் நல மன்றத் தலைவர் ஜே.எஸ்.ஏ.புகாரீ, அய்மான் கல்லூரி தலைவர் கனிமொழிக் கவிஞர் ஜே.ஷம்சுத்தீன், அபூதாபி அய்மான் சங்கத் தலைவர் அதிரை ஷாஹுல் ஹமீத், "உணர்வாய் உன்னை" புகழ் பொதக்குடி ஜலால், அல் தாவியா ரெக்ரூட்மெண்ட் நூர் இப்ராஹிம் ஆகியோர் இக்கூட்டத்தில் சிறப்பு விருந்தினர்களாகக் கலந்துகொண்டனர்.
மன்றத்தின் நிர்வாகிகள், துறை
பொறுப்பாளர்கள் இக்கூட்டத்தில் முறைப்படி தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.
கவுரவத் தலைவர்: ஐ.இம்தியாஸ் அஹ்மத் (மெல்கோ)
செயல் தலைவர்: மவ்லவீ எம்.ஏ.ஹபீபுர்ரஹ்மான் மஹ்ழரீ
துணைத்தலைவர்: எம்.எம்.மக்பூல் அஹ்மத்
பொதுச்செயலாளர்: வி.எஸ்.டி.ஷேக்னா
துணைப் பொதுச்செயலாளர்: ஆர்க்கிடெக்ட் எம்.ஜே.ஹபீபுர்ரஹ்மான்
பொருளாளர்: எம்.ஓ,அன்ஸாரீ
துணைப் பொருளாளர்: இப்றாஹீம் இர்ஷாத்
மக்கள் தொடர்பாளர்: ஏ.ஆர்.ரிஃபாயி
செய்தித் தொடர்பாளர்: எம்.இ.முஹ்யித்தீன் அப்துல் காதிர் (FNC)
முஸஃப்பா மண்டல பொறுப்பாளர்கள்: இஸ்மாஈல் (அமீரீ ஃப்ளைட்) மற்றும் நூருல் ஹக்
சந்தா சேகரிப்பாளர்: எம்.ஏ.எஸ்.லெப்பைத்தம்பி
இந்த நிகழ்ச்சியில் அபூதாபி, அல்அய்ன், ருவைஸ் மற்றும் துபை காயலர்கள் திரளாகக் கலந்துகொண்டனர்.
நன்றி காயல்பட்டிணம் டாட் காம்.
0 விமர்சனங்கள்:
Post a Comment