கீழக்கரை மேலத்தெரு பகுதியில் இம்மாதம் 3-ம் தேதி நடைபெற்ற திருட்டு வழக்கில் ஒருவர் கைது செய்யப்பட்டார்.
கீழக்கரை மேலத்தெருவை சேர்ந்த ஹமீது ஹூசைன் மகன் முகம்மது அலி (30), தனது உறவினர்களின் திருமணத்திற்காக கடந்த மாதம் டிஸம்பர் மாதம் கீழக்கரைக்கு வந்தார். திருமணங்கள் முடிந்து சென்னை திரும்ப ஜனவரி 4-ம் தேதி இருந்தார். ஆனால் அன்று இரவில், ரூ 8 இலட்சம் மதிப்புள்ள தங்க நகைகள் மற்றும் செல்போனும் திருட்டு போனது.
கீழக்கரை போலீஸார் வழக்கு பதிவு செய்து குற்றவாளிகளை தேடிவந்தனர், இந்நிலையில் ஏர்வாடி தெற்குத்தெரு பகுதியைச் சேர்ந்த சிக்கந்தர் மகன் நசுருதீன் (23), பெரியமாயாகுளம் பள்ளிவாசல் தெருவைச் சேர்ந்த ஹாஜா நஜிமுதீன் மகன் சேக் அலாவுதீன் ஆகிய இருவரும் இத்திருட்டில் ஈடுபட்டதாகத் தெரியவந்தது. இதைத் தொடர்ந்து நசுருதீன் செவ்வாய்க்கிழமை கைது செய்யப்பட்டு குற்றவியல் நடுவர் மன்ற நீதிபதி பாஸ்கரன் முன்பு ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். சேக் அலாவுதீனை போலீஸôர் தேடி வருகின்றனர்.

0 விமர்சனங்கள்:
Post a Comment