ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் தொடர்பான விவாதத்தில் மனிதநேய
மக்கள் கட்சியின் சட்டமன்ற குழு தலைவரும், இராமநாதபுரம் சட்டமன்ற உறுப்பினருமான முனைவர் M.H. ஜவாஹிருல்லாஹ் அவர்கள் நேற்று (03.02.12) அன்று ஆற்றிய உரையின்பொழுது தனது தொகுதிக்கு உட்பட்ட 3 நகராட்சிக்கும் தனி தனி நகராட்சி ஆணையர்களை நியமிக்க கேட்டுக் கொண்டார்.
தொகுதிப்பிரச்சனைகள்:
1.எனது இராமநாதபுரம் தொகுதியில் 3 நகராட்சிகள் உள்ளன. ஆனால் 3 நகராட்சிகளுக்கு தனி ஆணையாளர்கள் இருப்பதில்லை, தற்போது இராமநாதபுரம் நகராட்சி ஆணையாளர் கூடுதலாக கீழக்கரை நகராட்சியை கவனித்து வருகிறார். இராமேஸ்வரம் நகராட்சியில் நகராட்சிப் பொறியாளர் கூடுதலாக ஆணையாளர் பொறுப்பை கவனிக்கிறார் எனவே 3 நகராட்சிகளுக்கு தனி ஆணையாளர்கள் நியமனம் செய்யவேண்டுமென கேட்டுக்கொள்கிறேன்.

2.பாம்பன் பாலத்திற்கு வரும் சுற்றுலா பயணிகள் பாலத்தின் மையப் பகுதியிலேயே வாகனங்கள் நிறுத்தி அழகிய காட்சிகளைப் பார்க்கின்றனர் இதன் காரணமாக விபத்துகள் அதிகமாக நடைபெறுகின்றன. இதனை தவிர்ப்பதற்காக பாம்பன் பாலம் அருகே நிலப் பகுதியில் நல்ல உயரத்தில் காட்சி கோபுரங்கள் (Watch tower) ஏற்படுத்தி சுற்றுலா பயணிகள் அதிலிருந்து கடலின் அழகிய காட்சிகளைக் காண ஆவன செய்யுமாறு கேட்டுக்கொள்கிறேன்.
3.பாம்பன், தங்கச்சிமடம் பகுதியில் சேது சமுத்திரத் திட்டத்தின் தடை உத்தரவு காரணமாக மிக நீண்ட காலமாக அங்கிருக்கும் மக்களுக்கு பட்டா கிடைப்பதில்லை தடையுத்தரவு நீக்கி அப்பகுதியில் வாழும் மக்களுக்கு பட்டா வழங்க ஆவன செய்யுமாறு கேட்டுக்கொள்கிறேன்.
4.எனது தொகுதியில் புதிதாக முதியோர் ஓய்வூதியத்திற்கு விண்ணப்பித்தவர்களுக்கு ஓய்வூதிய உத்தரவு வழங்க முடியாத நிலை உள்ளது. இதற்குக் காரணம் இராமநாதபுரம் மாவட்டத்திற்கான ஒதுக்கீடு முடிவடைந்துவிட்டது என்று சொல்கிறார்கள். எனவே, எங்கள் மாவட்டத்திற்கு முதியோர் பயனாளிகளின் எண்ணிக்கையை உயர்த்தித் தருமாறு கேட்டுக்கொள்கிறேன்.
0 விமர்சனங்கள்:
Post a Comment