Saturday, November 17, 2012

படம் பிடித்த வாலிபரை விடுவியுங்கள்!


விமானநிலையத்தில் தன்னைப் படம் பிடித்த வாலிபரை விடுவித்துவிடும்படி தமிழகக் காவல்துறையை மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் கேட்டுக்கொண்டுள்ளார்.

கேரள மாநிலம் எர்ணாகுளம் பெரும்பாவூரைச் சேர்ந்த அமீர்தாவா (34) என்கிற சமையல் கலை நிபுணர், கடந்த 13.11.12 இரவு டெல்லி செல்ல மீனம்பாக்கம் காமராஜர் உள்நாட்டு விமான நிலைய முனையத்துக்கு வந்த மத்திய அமைச்சர் ப.சிதம்பரத்தை செல்பேசியில் படம் பிடித்தார். பாதுகாப்பு அதிகாரிகள் அந்தவாலிபரை பிடித்து விமான நிலைய காவலதிகாரிகளிடம் ஒப்படைத்தனர்.

இந்தியாவின் முக்கிய தலைவர்களை நேரில் பார்த்தால் அவர்களை செல்பேசியில் படம் எடுப்பது வழக்கம் என்று  அமீர்தாவா கூறினார்.அவரை 15 நாள் காவலில் வைக்க நடுவர்மன்ற நீதிபதி உத்தர விட்டார். இதையடுத்து அமீர் புழல் சிறையில் அடைக்கப்பட்டார்.

இந்நிலையில், ப.சிதம்பரம் விடுத்துள்ள அறிக்கையில், "சென்னை விமான நிலையத்தில் நடந்த சம்பவம் பற்றி எனக்கு எதுவும் தெரியாது. இது பற்றி செய்தி வெளியான பிறகு அதிர்ச்சி அடைந்தேன். உடனே  புகைப்படம் எடுத்த வாலிபரை விடுதலை செய்யும்படி தமிழக அதிகாரிகளை சென்னையில் உள்ள எனது அலுவலகம் மூலம் கேட்டுக் கொண்டேன் என்று கூறியுள்ளார்.

-இந்நேரம்.காம்.

0 விமர்சனங்கள்:

Post a Comment

Blogroll


இத்தளத்திற்கு வருகை தரும் உங்கள் மீது ஓர் இறையின் சாந்தியும் சமாதானமும் உண்டாகட்டுமாக!!